காதலியை இன்று கரம்பிடித்தார் நாமல் ராஜபக்ச

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் இன்று தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

சுற்றுலாத்துறையில் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்க வின் மகளான லிமினி வீரசிங்க என்ற பெண்ணை அவர் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற சமய சடங்குகளின் பின்னர், வீரக்கெட்டிய கால்டன் இல்லத்தில் வைபவம் நடைபெறவுள்ளது.

இதேவேளை இவர்களின் திருமண நிகழ்வில் நாமல் ராஜபக்சவின் சகோதரர்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் சகோதரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று திருமண பந்தத்தில் இணைவுள்ளனர்.

நாமல் ராஜபக்ச, சுற்றுலா துறையின் பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்கவின் மகளுடன் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இன்று காலை கொழும்பு கங்காராம விகாரையில் மத நிகழ்வு இடம்பெற்ற பின்னர் , வீரக்கெட்டிய கால்டன் வீட்டில் திருமண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த திருமண நிகழ்விற்காக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவருக்கும் நாமல் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.