வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞன் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

ஜா-எல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வெளிநாட்டு இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலையில் இயந்திரம் பொருத்திக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 19 வயதான துருக்கி நாட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயரிழந்தவரின் சடலம் ஜாஎல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers