கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு

Report Print Yathu in சமூகம்

ஜனாதிபதி செயலகத்தின் நிதியில் கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் இன்று வட மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் 7 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடம், கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் பங்களிப்புடன் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்குாவன், கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.