1400 தனியார் மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ளக பயிற்சிக்கான நியமனங்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

1400 தனியார் மருத்துவ பட்டதாரிகளுக்கு உள்ளக பயிற்சிக்கான நியமனங்களை (internship) சுகாதார அமைச்சு இன்று கையளிக்கவுள்ளது.

இந்த பட்டதாரிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் தகுதி பெற்றுள்ளனர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அவர்களுக்கு மாவட்ட மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் உள்ளக பயிற்சிகளை அமைச்சு வழங்கவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த மற்றும் எஸ்.எல்.எம்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு இலங்கை மருத்துவ ஆலோசனை சபைக்கு (எஸ்.எல்.எம்.சி) உச்ச நீதிமன்றம் ஜூலை மாதம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.