விசேட இராணுவ பணிக்குழு (எஸ்.டி.எஃப்) கொஸ்லாந்தையில் காணப்பட்ட 8700 கஞ்சா செடிகளை சோதனை செய்து அழித்துள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டங்களில் 9 அடி அளவிலான 5,500 தாவரங்களும், 1.5 அடி அளவிலான 3200 தாவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை எந்த சந்தேகநபர்களும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர் .