வவுனியா சிறைக்கைதிகளுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

சிறைக் கைதிகள் வாரத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 30 கைதிகளுக்கு இன்று காலை மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும், தண்டப்பணம் கொடுக்க முடியாதிருந்த சிறைக் கைதிகள் இருவருக்கு தண்டப் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஏற்பாட்டளார் ஏ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறைச்சாலை உயர் அதிகாரிகளும், சிறைச்சாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.