மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஹோமாகமை பிரதேசத்தில் தனியார் பகுதி நேர வகுப்பிற்குள் சில மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது தகாத முறையில் நடந்து கொண்டதாக சம்பவத்தை எதிர்நோக்கிய மாணவிகள் கூறியுள்ளனர்.

ஆசிரியர் குறித்து மூன்று மாணவிகள் பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளிடம் பொலிஸார் சாட்சியங்களை பெறவில்லை எனவும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர். சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் இந்த மாணவிகள், சந்தேகநபரிடம் விஞ்ஞானப்படத்தை கற்று வந்துள்ளனர்.

மாணவிகள் குறிப்புகளை எழுதும் நேரத்தில் சந்தேகநபர், அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்து மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பகுதி வகுப்பு ஆசிரியர் இன்று ஹேமாகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Latest Offers