காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers