ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

Report Print Kamel Kamel in சமூகம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அப்பிள் மெக் புக் ப்ரோ ரக மடிக் கணினியை விமானத்தில் கொண்டு செல்வதற்கு தடை விதித்துள்ளது.

இதன்படி, பயணிகள் கையிலோ அல்லது பொதிகளிலோ இந்த ரக மடிக் கணினிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ரக மடிக் கணினிகளின் பெட்டரியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரக மடிக் கணினிகள் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இதனால் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தைப் போன்றே பல விமான சேவை நிறுவனங்கள் இந்த ரக மடிக் கணினிகளை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 15 அங்குல எப்பல் மெக் புரோ ரக மடிக் கணினியே இவ்வாறு தீப்பற்றிக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.