கஞ்சிபான இம்ரானின் தந்தை கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் விற்பனையாளரான கஞ்சிபான இம்ரானின் தந்தை, சகோதரர் உட்பட ஆறு பேர் ரத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானை பார்ப்பதற்காக அவரது தந்தையும் சகோதரரும் நான்கு நண்பர்களும் இன்று அங்கு சென்றிருந்தனர். இவர்களிடம் இருந்த சந்தேகத்திற்குரிய பொதியை சோதனையிட்ட போது, அதில் இரண்டு செல்போன்கள் மற்றும் மின்னேற்றிகள் இருந்துள்ளன.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் இம்ரானின் தந்தையும் சகோதரரும் ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் மிரட்டிய சம்பவம் தொடர்பாக கஞ்சிபான இம்ரான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்க ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளை கஞ்சா தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கஞ்சிபான இம்ரானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆறாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.