நோய்வாய்ப்பட்ட நிலையில் குளத்தில் தஞ்சமடைந்த யானை

Report Print Ashik in சமூகம்

மன்னார் - மாந்தை மேற்கு, பரப்புக் கடந்தான் கிராமத்தில் உள்ள குளத்திற்கு நீர் குடிப்பதற்காக நோய்வாய்ப்பட்ட நிலையில் யானை ஒன்று வருகை தந்திருந்தது.

அப் பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் காட்டில் உள்ள மிருகங்கள் நீர் குடிப்பதற்காக அலை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரப்புக்கடந்தான் காட்டில் உள்ள யானை ஒன்று நீர் குடிப்பதற்காக இன்று காலை பரப்புக்கடந்தான் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றை நாடி வந்துள்ளது.

எனினும் குறித்த யானை காட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உடல் நோய் வாய்ப்பட்டு குறித்த குளப்பகுதியில் காணப்படுகின்றது.

யானை ஒன்று குறித்த குளப்பகுதியில் காணப்படுவதை கண்ட கிராம மக்கள் உடனடியாக கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், கிராம அலுவலகர் அடம்பன் பொலிஸ், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மேலதிக நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers