வேட்பாளர் ரணில்: தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Steephen Steephen in சமூகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிறுத்த உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் இது சம்பந்தமாக இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் பெரும்பான்மையானவர்கள், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைத்துள்ள சந்தர்ப்பத்தில், கட்சியின் தலைமை விடப்பிடியான தீர்மானத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரணில் என்பவர் துண்ணிய நூலில் தனது வேலை செய்து கொள்ளும் நபர் எனவும் அவர் இந்த சந்தர்ப்பத்தில் சஜித்தை தோளில் தூக்கி கொண்டு செல்ல மாட்டார் எனவும் அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச கீழ் மட்டத்தில் உள்ளவர்களை தன்னுடன் இணைந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாக காணக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என அவரை ஆதரிக்கும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நாட்டின் ஜனாதிபதியாக வருவதை விட கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமே சஜித் பிரேமதாசவுக்கு இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவர் தோல்வியடைவார் எனவும் கோத்தபாயவுக்கு இருக்கும் பிரபலமே இதற்கு காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோல்வியடைந்தால், ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற நேரிடும். எனினும் ரணிலுக்கு ஓய்வுபெறும் தேவையில்லை எனவும் தொடர்ந்தும் அரசியல்வாதியாக முன்னோக்கி செல்லும் தேவையே அவருக்கு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால், அவர் நிரந்தமான எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் எனவும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.