வவுனியா வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டிடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் இக்கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
