வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே விபத்து : ஒருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இரவு 8.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக் கொண்டிந்த மோட்டார் சைக்கிள் வீதியில் திரும்ப முற்பட்ட போது அதே பாதையில் வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தினை அப்புறப்படுத்தியதுடன், அவ்விடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக இரு வாகனத்தினையும் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Latest Offers