ராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு

Report Print Suman Suman in சமூகம்

முன்னாள் மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்ற மூத்த சட்டத்தரணி ராம் ஜெத்மலானி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

ராம் ஜெத்மலானி கடந்த 08.09.2019 அன்று இயற்கையெய்தினார். அவரது நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ராம் ஜெத்மலானி ஈழமக்களுக்காக குரல் கொடுத்தவர் எனதுடன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இறுதிவரை வாதாடிய சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.