வவுனியாவில் சிறுவர்களாக மாறிய முதியவர்கள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதியவர்கள் சிறுவர்கள் போல் விளையாடி மகிழ்ந்தனர்.

மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று காலை தொடக்கம் மதியம் வரை இவ்விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவட்ட சமூக சேவை அலுவலகர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு போட்டியில் கிடுகு பின்னுதல், வேகநடை, சங்கீதக்கதிரை, கூடைக்குள் பந்துபோடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன.

இதில் முதியோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

இப்போட்டிகளை விளையாட்டு உத்தியோகத்தர் பிந்துசன் வழிநடத்தியதுடன் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தரூபன் ஒழுங்கைப்பாளராக இருந்தார்.

இதேவேளை, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.