தியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி தருமாறு கோரிக்கை!

Report Print Sumi in சமூகம்

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை துப்புரவு செய்து நினைவு தின அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்துதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நினைவிடத் தூபி 1988ம் ஆண்டில் நான் மாநகர ஆணையாளராக இருந்தபோது எமது செலவில் நிர்மாணிக்கப்பட்டது என்பதும் அது அரச படைகளால் அழிக்கப்பட்டதனால் மீண்டும் 1998 இல் புனரமைக்கப்பட்டது.

அதுவும் அரச படைகளால் அழிக்கப்பட்டாலும் நினைவிடத் தளம் அப்படியே உள்ளது. ஆகவே, இந்த நினைவிடத்தை பராமரித்து நிர்வகிக்கும் உரிமையும் பொறுப்பும் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே உரியதாகும்.

ஆகையினால், அதனை வேறு எவருமோ அல்லது அரசியல் கட்சியோ உரிமை கோரமுடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers