அம்பாறையில் சடுதியாக அதிகரித்துள்ள மீன் வகைகளின் விலைகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - கிட்டங்கி ஆற்றுப் பகுதியில் மீன்களின் பிடிபாடு குறைவடைந்துள்ள நிலையில் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் காற்றழுத்தம் என்பவற்றின் காரணமாகவே மீன்களின் பிடிபாடு வெகுவாக குறைவடைந்துள்ளன.

இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் ஆறு, குளம் போன்ற இடங்களில் மீன்கள் பிடிபடுவது குறைவடைந்துள்ளன.

இதனால் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

அந்த வகையில் கோல்டன் செப்பலி ஒரு கிலோகிராம் 500 ரூபாவாகவும், கணையான் ஒரு கிலோகிராம் 1000 ரூபாவாகவும், கொய் ஒரு கிலோகிராம் 400 ரூபாவாகவும், கொடுவா ஒரு கிலோகிராம் 1000 ரூபாவாகவும், கெண்டை ஒரு கிலோகிராம் 400 ரூபாவாகவும், விரால் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன என கூறியுள்ளனர்.

மேலும், முதலைகளின் நடமாட்டம் காரணமாகவும் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.