வெளிநாடு ஒன்றில் கணவனை கொடூரமாக வெட்டிய இலங்கை பெண்

Report Print Vethu Vethu in சமூகம்

மலேசியாவில் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவனை, இலங்கையை சேர்ந்த மனைவி கொடூரமாக கத்தியால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலையில் அவர்களின் வாடகை வீட்டில் இடம்பெற்றுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் தாக்குதலால் இலங்கையை சேர்ந்த நபரே படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

பலத்த காயங்களுக்குள்ளான நபரின் மனைவியை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அவரும் இலங்கை பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயங்களுக்குள்ளான கணவன் மிகவும் ஆபத்தான நிலையில் Raja Permaisuri Bainun வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் உள்நாட்டு வன்முறைச் சட்டம் 1994 இன் பிரிவு 18 ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers