மகளின் பொய்யான முறைப்பாட்டால் 8 ஆண்டுகள் கஷ்டங்களை அனுபவித்த தந்தை

Report Print Steephen Steephen in சமூகம்

பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் நேற்று வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார்.

கொந்துராகே மகிந்த பெரேரா என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு தனது தந்தை தன்னை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறி, அப்போது 14 வயதான மகள், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

தனது தந்தை மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் தாக்கி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனால், அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற, பாட்டனார் கூறிய யோசனையை கேட்டு மகள் பொய்யான முறைப்பாட்டை செய்ததாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட நபரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

முறைப்பாடு செய்த யுவதியின் பாட்டனார் மரணமடைந்து விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. மகளின் பொய்யான முறைப்பாட்டால், தந்தை 8 ஆண்டுகள் சிறையில் கஷ்டங்களை அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.