வீடு புகுந்து களவாட முயன்ற நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

Report Print Sumi in சமூகம்

யாழ்.ராசந்தோட்டம் பகுதியில் வீடு புகுந்து களவாட முயன்ற நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பகல் வீட்டின் மதில் ஊடாக பாய்ந்த குறித்த நபர் உள்ளே செல்ல முற்பட்ட போது பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

அவர் திருகோணமலையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.