வாழைச்சேனையில் கைக்குண்டு ஒன்று மீட்பு

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, சுங்காங்கேணியில் உள்ள தனியார் தென்னந் தோட்டத்திலிருந்து நேற்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மர்மப் பொருள் ஒன்று இருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers