எதிர்காலத்துக்காக ஏங்கிய சிறுவனின் திடீர் இழப்பு! தனியே தவிக்கும் தாய்

Report Print Dias Dias in சமூகம்

ஐபிசி தமிழ் தொலைக்காட்சி நடத்தி வரும் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிந்துஜன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தலையில் இருந்து பெரிய கட்டியை நீக்குவதற்கான சிகிச்சைகளுக்காக புலம்பெயர்ந்த மக்களின் உதவியை ஐபிசி தமிழ் தொலைக்காட்சி உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக பெற்றுக் கொடுத்திருந்தது.

எனினும் சிகிச்சையின் பின்னர் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளமை சிறுவனின் குடும்பத்தாரையும் அவருக்கு உதவி செய்த பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தனது மகனை மாத்திரமே உறவாகக் கொண்ட அவரது தாயையும் சிறுவனின் இழப்பு தனிமைப்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த சிறுவனின் மருத்துவ தேவைக்கு உதவிய ஐபிசி தொலைக்காட்சி மற்றும் புலம் பெயர் உறவுகளிற்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.