கைதிகளிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றிய அதிகாரிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூசா சிறைச்சாலையில் உள்ள விசேட சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொட்ட நௌபர், வெலே சுதா மற்றும் சூசை ஆகிய கைதிகளிடம் இருந்து மூன்று செல்போன்களை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜே.டப்ளியூ. தென்னகோனின் உத்தரவின் பேரில், சிறைச்சாலை அதிகாரிகள் இந்த விசேட தேடுதலை நடத்தியுள்ளதுடன் இந்த செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.

கைதிகள் இந்த செல்போன்களை பயன்படுத்தி யாருடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்பதை கண்டறிய அவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி கைதிகள் சம்பந்தமாக சிறைச்சாலை சட்டத்தின் கீழு் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த கைதிகளை விசேட சிறையில் தடுத்து வைக்க தேவையான நடவடிக்கைளை எடுக்குமாறு ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

இதற்கு அமைய மரண தண்டனை கைதிகள் உட்பட முக்கியமான 20இற்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு மாதத்திற்கு முன்னர் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.