தடைகளை தாண்டி வெட்டுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இறுதி நாள் பூஜை!

Report Print Theesan in சமூகம்

நெடுங்கேணி வெட்டுக்குநாறி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன், ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4ம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இன்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலு மடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன.

இன்றிரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.

இன்றைய இறுதி நாள் பூஜை நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers