தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர்களிடம் சி.ரி.ஐ.டி. விசாரணை

Report Print Kanmani in சமூகம்

தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாஅத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹீம் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களில் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. ஆகிய விசேட விசாரணைப் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடிக் கட்டுப்பாட்டில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விசாரணைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சஹ்ரானுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற பல சந்தேக நபர்களையும் சிறப்பு விசாரணைகளுக்கு தற்போது உட்படுத்தியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.