இரண்டு பெண் பிள்ளைகள் வீரச்சாவு! பதை.. பதைக்கும் ஒரு தந்தையின் வாழ்வு..

Report Print Kanmani in சமூகம்

நான்கு பிள்ளைகளை பெற்று நாட்டிற்காக போராட அனுப்பி இன்று ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி வாழும் அப்பாவி பெற்றோர்கள் இன்னும் ஆங்காங்கே வறுமையின் உச்சத்தில் அன்றாடம் போராடி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு - ஆத்திப்புலவு என்ற கிராமத்தில் அடுத்த வேளை உணவிற்கு பட்டினியில் வாடிக்கொண்டிருக்கும் 75 வயதுடைய வெள்ளைச்சாமி ஐயாவுக்கு இரண்டு பிள்ளைகள்.

இருவரும் வீரச்சாவடைந்துள்ளனர். மனைவி அதற்கு முன்னரேயே உயிரிழந்து விட்டார். மனநலம் குன்றிய மகளோடு வாழ்க்கையை கடத்துகின்றார்.

மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா அரசின் உதவியுடன் உண்ண உணவு இல்லாத பட்சத்தில் பிஸ்கட்டினை மாத்திரம் உணவாக்கி கொண்டு வாழ் நாளை கழித்து வருகின்றார்.

இவர் அன்றாடம் வாழ்வில் எதிர்நோக்கும் சொல்லண்ணா துயரங்களை எமது ஐ பி சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக உங்கள் பார்வைக்காக,

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் 94212030600 அல்லது 94757776363 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.