கொழும்பில் காணாமல் போன இரட்டை சிறுமிகள் கண்டுபிடிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் உறவினர் ஒருவர் எச்சரித்தமையினால் கோபமடைந்து வீட்டை சென்ற சிறுமிகள் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை குறித்த இருவரும் மாவனெல்ல வீடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகள் இருவரும் தற்போது வைத்திய பரிசோதனைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி மற்றும் சித்மி என்ற 14 வயது இரட்டை சிறுமிகளே காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers