கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை

Report Print Steephen Steephen in சமூகம்

86 இலட்சத்து 42ஆயிரம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சென்னையில் இருந்து கட்டுநாயக்க சென்ற விமானத்தில் இவர் இலங்கை வந்துள்ளார். இவரது பயண பொதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்துள்ளனர்.

அப்போது அவரது பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 846 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 26 வயதான இந்திய பிரஜை எனத் தெரியவருகின்றது.