கஞ்சா விற்பனையுடன் தொடர்புடையோருக்கு நீதிமன்று விதித்த உத்தரவு

Report Print Gokulan Gokulan in சமூகம்

கல்முனைக்குடி பகுதியில் கஞ்சா விற்பனையுடன் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி இரவு கல்முனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞர் ஒருவரை கைது செய்திருந்தனர்.

குறித்த இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், வீடு ஒன்றை முற்றுகையிட்ட போது தராசு ஒன்றில் கேரளா கஞ்சாவினை அளவீடு செய்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன், 7 கிலோ கிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, கல்முனை நீதிவானின் நேற்று வழங்கிய உத்தரவிற்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.