உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களை விடுவித்து தருவதாக கூறி பணம் மோசடி!

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்து தருவதாக கூறி பணம் பெற்ற ஒருவரை பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொட்டிகாவத்தையை சேர்ந்த வர்த்தகரான இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உறவினர்களிடம் இருந்து 1.7 மில்லியன் ரூபாய்களை பெற்று அவர்களை ஏமாற்றியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சந்தேகநபர்களை விடுவிக்கலாம் என்று கூறியே வர்த்தகர் பணம் பெற்றுள்ளார்.