சிறுநீரக நோயினால் 6000 பேர் உயிரிழப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் 2006ம் ஆண்டுக்கும் 2018ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறுநீகர நோய்க் காரணமாக 6000 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை நாடாளுமன்றத்தில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு 2135 மரணங்களும், 2017ம் ஆண்டு 2159 மரணங்களும், 2016இல் 2187 மரணங்களும் சிறுநீரக நோய்க்காரணமாக நிகழ்ந்துள்ளன.

இந்த காலப்பகுதியில் 17ஆயிரத்து 503 பேர் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 787 பேர் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுநீரக நோயை தடுக்க சீனாவுடன் இணைந்து இலங்கை பேராதெனியவில் குடிநீர் ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்து வருகின்றது. இது 2020ம் ஆண்டில் நிறைவுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest Offers