நிசங்க சேனாதிபதியுடன் இலஞ்சத்துறை முன்னாள் ஆணையாளர் உரையாடினாரா?

Report Print Ajith Ajith in சமூகம்

ஆயுத களஞ்சிய “எவென்காட்” நிறுவன தலைவர் நிசங்க சேனாதிபதியுடன் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தில்ருக்சி டயஸ் விக்ரமசிங்க தொலைபேசியில் உரையாடியதாக கூறப்படும் ஒலிப்பதிவு குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த ஒலிப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் எவென்காட் விடயத்தில் தாம் சட்ட நடவடிக்கை எடுத்தமைக்கு தில்ருக்சி வருத்தம் வெளியிட்டுள்ளார்.

சட்டத்தை எவ்வாறு உடைப்பது, சட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது தமக்கு தெரியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் சட்டநடவடிக்கைக்கு சென்றிருக்காது போனால் பலர் தொழில்களை இழந்திருப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஒலிப்பதிவு தொடர்பில் கருத்துரைத்துள்ள நீதியமைச்சர் தலதா அத்துகோரளை,

குறித்த ஒலிப்பதிவில் உள்ளது தில்ருக்சியின் குரலா என்பதை முதலில் தெரிந்துக்கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.