ஆபாச அழகிகளால் பொலிஸாருக்கு ஏற்பட்ட நெருக்கடி

Report Print Vethu Vethu in சமூகம்

கம்பஹாவில் விபச்சார செயற்பாட்டில் ஈடுபட்ட பெண்களை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பாலியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சுற்றுவளைக்கப்பட்டனர்.

எனினும் கைது செய்யும் நடவடிக்கைகக்கு எதிராக குறித்த பெண்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்த போது கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் பொலிஸ் வண்டியில் ஏறுவதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. எனினும் முயற்சியை கைவிடாத பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

சந்தேக நபர்களான பெண்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.