குறுகிய கால வாடகைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் செல்லப்பிராணிகளை இழக்கும் நுவரெலியா மக்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

நுவரெலியாவுக்கு சுற்றுலாவுக்காக வருவோர் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப்பிராணிகளை தாம் செல்லும்போது கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சுற்றுலா வருபவர்களுக்காக நுவரெலியாவில் உள்ள சிலர் தமது வீடுகளை குறுகிய கால வாடகைக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த காலத்தில் அவர்கள் வேறு வீடுகளுக்கு சென்று தாம் வசிக்கும் வீடுகளை அதிக விலைக்கு வாடகைக்கு வழங்குகின்றனர்.

எனினும் தமது செல்லப்பிராணிகளை தம்முடன் அழைத்து செல்லாமல் குறித்த வீடுகளிலேயே விட்டு செல்கின்றனர்.

இதன்போது சுற்றுலா வருவோர் தாம் வீடுகளை விட்டு செல்லும்போது குறித்த செல்லப்பிராணிகளையும் கொண்டு செல்வதாக முறையிடப்பட்டுள்ளது.

எனினும் பொலிஸ் முறைப்பாட்டின் மூலம் தமது செல்லப்பிராணிகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் என்று வாடகை வீட்டு சொந்தக்காரர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.