நீர்காகம் போர் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

திருகோணமலை குச்சவெளி, கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்காகம் போர் பயிற்சியின் போது, பரசூட் கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் பரசூட் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் விழுந்துள்ளது.

கடலில் மூழ்கிய இராணுவ சிப்பாய் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இராணுவ கமாண்டோ படைப் பிரிவில் கடமையாற்றிய இரத்தினபுரி -மாரபன,கஹதெனிய, கிரில்ல பகுதியைச்சேர்ந்த குருந்து ஹேவகே சாலிய பிரியந்த என்ற 35 வயதுடையஇராணுவ கோப்ரலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்.

சட்ட வைத்திய பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers

loading...