நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் இசைக் கலைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

Report Print Gokulan Gokulan in சமூகம்

இலங்கை தமிழ் இசைத் துறையை மேம்படுத்த தமிழ் இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து, ஒருமித்து திட்டங்களை செயற்படுத்தவேண்டுமென இலங்கையின் பிரபல பாடகர் மஹிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் இசைக்கலைஞர் சங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழ் இசைத் துறையை மேம்படுத்த தமிழ் இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து, ஒருமித்து திட்டங்களை செயற்படுத்துவதும், இலங்கை தமிழ் இசைக்கலைஞர்களின் சமூக, பொருளாதார, தொழில்சார் மேம்பாட்டிற்கான வழிமுறைகளை உருவாக்கிச் செயற்படுத்துவதும் போன்ற நியாயமான தூய்மையான எண்ணங்களோடு முதற்கட்டமாக கொழும்பில் வாழ்கின்ற இசைக்கலைஞர்களை இணைத்துக்கொண்டு கடந்த வருடம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் இன்று இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வாழ்கின்ற தமிழ் இசைக்கலைஞர்களை உள்வாங்கிய வண்ணம் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...