இலங்கைக்கு அமைதி வேண்டி முள்ளிவாய்க்காலில் விசேட பிரார்த்தனை

Report Print Theesan in சமூகம்

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கை திருநாட்டிற்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் தைமானத்தில் நேற்று மாலை 6.30மணி முதல் இன்று அதிகாலை 5 மணிவரையும் இவ் விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் விசேட பிரதிநிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். எஸ். சிவமோகன், முள்ளிவாய்க்கால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போதகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Latest Offers