லண்டனில் வேலை செய்யும் இலங்கையருக்கு மலேசியாவில் நேர்ந்த கொடூரம்! கதறி அழும் தாய்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மலேசியாவில் குடியுரிமைப் பெற்று லண்டனில் தொழில் புரிந்து வரும் இலங்கையர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி மலேசியா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

40 வயதுடைய ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்த்து, அவரது உறவினர்கள் இருவரும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஜனார்த்தனன் லண்டனில் தொழில் புரிந்து வந்த நிலையில், நோயுற்றிருக்கும் தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக குடும்பத்தாருடன் மலேசியாவிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இரவு உணவு உண்பதற்காக ஒரு உணவகத்திற்கு தனது உறவினர்களுடன் அன்றையதினம் சென்றிருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், ஜனார்த்தனன் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மலேசிய பொலிஸார் அவரது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் ஜனார்த்தனனின் தாயார், எனது பிள்ளை மிகவும் ஒழுக்கமானவர். மலேசிய பொலிஸார் என் மகன் மீது பொய்யான முத்திரையை குத்துகின்றனர் என கதறி அழுதுள்ளார்.

Latest Offers

loading...