யாழில் வன்னிய சிங்கத்தின் 60வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

கோப்பாய் கோமகன்(முன்னாள் கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்) என்று அழைக்கப்படும் வன்னிய சிங்கத்தின் 60வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைந்துள்ள மாதர் சங்க கட்டட தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலி நிகழ்விற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி நினைவுப் பேருரையை ஆற்றியுள்ளார்.

இந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம், வலிகள் ஆகிய பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers

loading...