முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடைநீக்கம்

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டில் அவசரகால நிலை நடைமுறையில் இல்லாததன் காரணமாக நியாப் மற்றும் பர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் விவகார மற்றும் தபால் சேவைகள் துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தொடுத்த கேள்வி ஒன்றுக்கு சட்டம் ஒழுங்குத்துறைக்கான பிரதிக்காவல்துறை அதிபர் அஜித் ரோஹன இந்த பதிலை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் முகத்தை மூடிய ஆடைகளின் மீதான தடைகளை நீக்கிய கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடை கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.