கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம் - கதறும் உறவுகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - சாய்ந்தமருது, மாளிகைக்காட்டுத் துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (18) மாளிகைக்காட்டுத் துறையில் இருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 3 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி உள்ளதாக குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ), காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸார், கடற்படையினர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதுடன், மீனவ சங்கங்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளன.

மேலும் கடந்த செப்டம்பர் 4ம் திகதி காணாமல் போன மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கையிலிருந்து 350 மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் மீன்பிடிக்க சென்ற படகினை கரைக்கு கொண்டு வரமுடியாது என சர்வதேச கடல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும், உடமையிழப்புகளும் நிகழ்கின்றன.

உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...