முல்லைத்தீவு பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி! தடைகோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதிக் கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்து முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தற்போது நள்ளிரவு தாண்டிய நிலையிலும் முறைப்பாடு செய்து தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.