திருமணம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் கோர விபத்தில் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

வெல்லவாய மொனராகலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், பேருந்து ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த போது, எதிராக வந்த மோட்டார் வாகனத்துடன் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வெல்லவாய, ஆனபல்லம பிரதேசத்தை சேர்ந்த அம்பான விதானகே திசர ஷாலிக என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.