பாதையை கடக்க முற்பட்டவருக்கு ஏற்பட்ட நிலை

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - குருமன்காட்டு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அப் பகுதியில் பாதையினை கடக்க முற்பட்ட நபரை முச்சக்கரவண்டி மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் 40 வயதுடைய திருநாவற்குளத்தினைச் சேர்ந்த சிதம்பரம் செல்லத்துரை எனத் தெரியவருகின்றது.

குறித்த பகுதியிலிருந்து 50 மீற்றர் தொலைவில் பாதசாரிகள் கடவை இருந்தும், அந்நபர் பாதசாரிகள் கடவையினை பயன்படுத்தாது வீதியினுடாக அவதானமின்றி கடக்க முற்பட்ட வேளையிலிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers