யாழ். மற்றும் கொழும்புக்கிடையிலான உத்தரதேவி புகையிரதம் தடம்புரள்வு

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொழும்பு, காங்கேசன்துறை பகுதிக்கு இடையிலான உத்தரதேவி புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இவ்வாறு குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இதன்காரணமாக வடக்குக்கான புகையிரத சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிய பயணித்த நிலையிலேயே உத்தரதேவி புகையிரதம் தடம் புரண்டதாகவும் வடக்கிற்கான புகையிரத சேவைகள் விரைவில் வழமைக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.