வெகுவிமர்சையாக இடம்பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில் இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.

அந்தவகையில், மட்டக்களப்பு - கல்லடி பாலம் மற்றும் தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்திற்கு முன்பாக கலாசார பேரணி ஒன்றும் ஆரம்பமாகியிருந்தது.

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் மற்றும் கிழக்கில் வாழும் சகல இன மக்களின் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேரணியானது தேவநாயகம் மண்டபத்திற்கு வந்தடைந்ததையடுத்து, தமிழ் தாய்க்கு பணிப்பாளரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், கலாசார திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers

loading...