திருமணத்தில் கலந்து விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த கதி

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் வசிக்கும் 6 வயதுச் சிறுவன் வீதி விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளார்.

இன்று காலை கண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது சம்பவத்தில் பலியான 06 வயதுடைய அன்சார் அன்சாப் என்பவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.