கடலுக்கு சென்ற மீனவர்களை காணவில்லை

Report Print Steephen Steephen in சமூகம்

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என அவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்கள் கடந்த வியாழக்கிழமை கடலுக்கு சென்றுள்ளனர். அன்று கடலுக்கு சென்றவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.