மக்களின் அச்சத்தை நீக்கிய வனவிலங்கு அதிகாரிகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பாறை - உஹன பகுதியைச் சேர்ந்த மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள் இன்று அதிகாலை பெரும் முயற்சிக்கு மத்தியில் குறித்த காட்டுயானையை பிடித்துள்ளனர்.

அந்த காட்டு யானையின் தாக்குதலினால் கடந்த வாரம் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

இந்த காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக வீரகொட திஸ்ஸபுர மற்றும் சுகதகம பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers